search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு"

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமின் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. #INXMediaCase #KartiChidambaram #CBI
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த பிப்ரவரி மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நான்கு முறை அவரை விசாரிக்க பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. டெல்லியில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ விசாரித்தது.

    இதனை அடுத்து, விசாரணை காவல் முடிந்து நீதிமன்ற காவலில் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்டார். ஜாமின் வழங்கக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், மார்ச் 23-ம் தேதி நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கிய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 
    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் இன்று நடத்திய நான்கு மணி நேர விசாரணை நிறைவடைந்தது. #INXMediaCase #PChidambaram
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்த போது விதிமுறைகளை மீறி ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ரூ.350 கோடி அந்நிய முதலீடு பெறுவதற்கு உதவி செய்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டி இருந்தது. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார்.

    இந்நிலையில், இந்த வழக்கில் ப.சிதம்பரம் ஆஜராகி விளக்கமளிக்க சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் அவரை ஜூலை 3-ந்தேதி வரை கைது செய்ய தடை விதித்தும், இடைக்கால ஜாமீன் வழங்கியும் டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.

    இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம் இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகம் முன்பு முதல் முறையாக ஆஜரானார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பின்னர் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “சிபிஐ-யின் முதல் தகவல் அறிக்கையில் என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. வெளிநாட்டு நிதிமுதலீடு பிரிவு கோப்புகள் தொடர்பாக கேள்விகளும் பதில்களும் இருந்தது” என தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன இயக்குனர் இந்திராணி முகர்ஜி, செய்தி இயக்குனர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் தங்களது மகள் ஷீனா போராவை கொன்ற வழக்கில் தற்போது சிறையில் உள்ளனர். 
    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் உள்ள கார்த்தி சிதம்பரம் கோர்ட் அனுமதியுடன் இன்று காலை லண்டனுக்கு புறப்பட்டுச்சென்றார். #KarthiChidambaram
    சென்னை:

    ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பணம் ஆதாயம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஜாமினில் உள்ளார்.

    இந்த நிலையில், அவர் சொந்த அலுவல் காரணமாக வெளிநாடு செல்ல அன மதிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து நிபந்தனையுடன் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

    இன்று காலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு கார்த்தி சிதம்பரம் வந்தார். அவர் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
    ×